பரமத்திவேலூர், செப்.4: பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதியில் இருந்து 2755 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சமாக கிலோ ₹31.90க்கும், குறைந்தபட்சமாக ₹24.00க்கும், சராசரியாக ₹31.29க்கும் ஏலம் போனது. ஆக மொத்தம் ₹83 ஆயிரத்து 16க்கு வர்த்தகம் நடைபெற்றது.
பரமத்திவேலூரில் ₹83 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்
previous post