Saturday, April 13, 2024
Home » பரமக்குடியில் 76 வது ஜெயலலிதா பிறந்தநாள்

பரமக்குடியில் 76 வது ஜெயலலிதா பிறந்தநாள்

by Ranjith

 

பரமக்குடி, பிப்.25: பரமக்குடியில் மாவட்ட அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் அதிமுக 76 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானத்தை மாவட்ட செயலாளர் முனியசாமி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நகர் அம்மா பேரவை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் பிரபாகரன், டாக்டர் முத்தையா, கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமிஆகியோர் முன்னிலையில்,

முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக அதிமுக கொடி, ஏற்றப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வேந்தோணி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், நகர் மன்ற உறுப்பினர் ஜெயசங்கர் கண்ணன் உள்ளிட்ட அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இறுதியில், நகர் அம்மா பேரவை செயலாளர் வட மலையான் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

twelve + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi