பரமக்குடி: பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் கால் மேல் கால் போட்டு குடிமகன் ஹாயாக படுத்து தூங்கிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையிலிருந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிபட்டினம் ஆகிய ஊர்களுக்கு செல்பவர்கள் பரமக்குடி வழியாகத்தான் செல்ல வேண்டும். தினசரி டூவீலர், கார், பஸ் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த தேசிய சாலையில் சென்று வருகின்றன. பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் நேற்று போதை தலைக்கேறிய நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் நடு ரோட்டிலும், சாலை ஓரத்திலும் மாறி மாறி படுத்து தூங்கி உள்ளார். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவரை இழுத்துச் சென்று சாலையில் ஓரமாக போட்டுள்ளனர். குடிமகன் நடு ரோட்டில் தூங்கியதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது….