பரமக்குடி,நவ.7: பரமக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பரமக்குடி வடக்கு நகர் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடியினை திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ ஏற்றி வைத்தார். தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா அனைத்து துறை சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பரமக்குடி வடக்கு நகர் கழகம் சார்பாக 8வது வார்டு பகுதியில் திமுக கொடி கம்பம் மற்றும் கல்வெட்டு அமைக்கப்பட்டது.
நேற்று, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ கட்சி கொடியினை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர், பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக, வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் எஸ்எம்டி அருளானந்த், போகலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள்
செல்வி, சர்மிளா, நகர்மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், பாக்கியராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.