கடவூர், ஜுலை 1: தோகைமலை அருகே வெவ்வேறு இடங்களில் சிறுமி, இளம்பெண் மாயமாகினர்.
கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே ஆதனூர் ஊராட்சி கீழமேட்டுப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்து விட்டு தற்போது கல்லூரியில் சேருவதற்காக தனது வீட்டில் இருந்து வந்தார். கடந்த 28ம் தேதிதனது பெற்றோர்களுடன் இரவு உணவு சாப்பிட்டு உள்ளார். பின்னர் தூங்குவதற்காக வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவு காளிமுத்து எழுந்து பார்த்தபோது தூங்கிக்கொண்டிருந்த மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காளிமுத்து தங்களது உறவினர்கள் வீடுகள் மற்றும் அவரின் மகளின் தோழிகள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் மகள் கிடைக்கவில்லை.
சிந்தாமணிப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வருகின்றனர்.