நன்றி குங்குமம் தோழி ;வாசகர் பகுதிமூலிகைகள் நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.சிறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவரைதான் தேடிப் போகவேண்டும் என்று அவசியமில்லை.ஒவ்வொரு மூலிகையும் ஒரு அற்புத மருந்தாகும். நம் கண் முன்னே பல மூலிகைகள் இருந்தாலும் அதன் பயன் மற்றும் நன்மைகளை தெரிந்து கொள்ள முற்படுவதில்லை. இயற்கையில் கிடைக்கக் கூடிய பொருட்களின் பயன்களை பற்றி அறிந்துகொள்வோம்.
கறிவேப்பிலை: நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எரிச்சல், ஈரல் கோளாறுகள் மறையும். பித்தத்தை தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.அறுகம்புல்: எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. ரத்தப்புற்று குணமடைய அறுகம்புல் ஒரு உலகப்புகழ் வாய்ந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகாிக்கச் செய்வதில் சிறந்தது அறுகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அறுகம்புல்லில் நீங்கும். ரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது.– கவிதா சரவணன், திருச்சி