Monday, September 9, 2024
Home » பயன்படுத்திய காகிதங்களை கொண்டு 5 அடி உயரத்தில் வித்யா விநாயகர்

பயன்படுத்திய காகிதங்களை கொண்டு 5 அடி உயரத்தில் வித்யா விநாயகர்

by Karthik Yash

புதுச்சேரி, செப். 5: புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் 20 கிலோ காகிதங்களைக்கொண்டு 5 அடியில் ரசாயனமின்றி வித்யா விநாயகர் சிலையை வடிவமைத்து அசத்தியுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 7ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களிலும் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடவுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 7ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களிலும் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடவுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுண்கலை பிரிவில் பயிலும் மாணவர்கள் பழைய பேப்பர்களை கொண்டு பல்வேறு சிற்பங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாணவர்களுக்கு விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்தார். இதன் பயனாக 10 மாணவர்கள் இணைந்து பள்ளியில் 20 கிலோ பயனற்ற காகிதங்களை கொண்டு 5 அடி உயரத்தில் ரசாயனம் எதுவுமின்றி வித்யா விநாயகர் சிலையை ஒருவார காலத்தில் உருவாக்கியுள்ளனர். கல்வியை போதிக்கும் காகிதத்தாலான வித்யா விநாயகர் சிலையின் ஒரு கையில் புத்தகமும், மற்றொரு கையில் பென்சிலும் இடம்பெற்றுள்ளது. இந்த விநாயகர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணனிடம் கேட்டபோது, ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் விநாயகர் சிலையை செய்வோம். இந்த ஆண்டு 11ம் வகுப்பில் நுண்கலைப்பிரிவு புதிதாக ஆரம்பித்துள்ளனர். இந்த மாணவர்களை கொண்டு 25 கிலோ பயன்படுத்திய காகிதங்களை கொண்டு வித்யா விநாயகர் சிலையை செய்துள்ளோம், என்றார். இந்நிலையில், புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுண்கலை பிரிவில் பயிலும் மாணவர்கள் பழைய பேப்பர்களை கொண்டு பல்வேறு சிற்பங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாணவர்களுக்கு விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்தார்.

இதன் பயனாக 10 மாணவர்கள் இணைந்து பள்ளியில் 20 கிலோ பயனற்ற காகிதங்களை கொண்டு 5 அடி உயரத்தில் ரசாயனம் எதுவுமின்றி வித்யா விநாயகர் சிலையை ஒருவார காலத்தில் உருவாக்கியுள்ளனர். கல்வியை போதிக்கும் காகிதத்தாலான வித்யா விநாயகர் சிலையின் ஒரு கையில் புத்தகமும், மற்றொரு கையில் பென்சிலும் இடம்பெற்றுள்ளது. இந்த விநாயகர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணனிடம் கேட்டபோது, ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் விநாயகர் சிலையை செய்வோம். இந்த ஆண்டு 11ம் வகுப்பில் நுண்கலைப்பிரிவு புதிதாக ஆரம்பித்துள்ளனர். இந்த மாணவர்களை கொண்டு 25 கிலோ பயன்படுத்திய காகிதங்களை கொண்டு வித்யா விநாயகர் சிலையை செய்துள்ளோம், என்றார்.

You may also like

Leave a Comment

1 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi