Saturday, June 14, 2025
Home மருத்துவம்உடல்நலம் உங்கள் கையில் பயனுள்ள மருத்துவ கண்காட்சி!

பயனுள்ள மருத்துவ கண்காட்சி!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் ;; ;பொதுமக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன் தரும் வகையில் மருத்துவ கண்காட்சி ஒன்றை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது சன் குழுமம். தினகரன் ஹெல்த் அண்ட் ஃபிட்னஸ் எக்ஸ்போ 2019 என்ற பெயரில் நடந்த இந்த பிரமாண்ட எக்ஸ்போ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஹெல்த் எக்ஸ்போவை தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர் ரமேஷ் அவர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஜெம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் எம்.எஸ்.அசோகன், நியூட்ரா பாக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி நிகார் தேசாய், சித்த மருத்துவர் யோக வித்யா மற்றும் ‘உலக ஆணழகன்’ பட்டம் வென்ற அரசு ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்பித்தனர்.மருத்துவக் கண்காட்சியை தினகரன் நாளிதழுடன் மியாட் இன்டர்நேஷனல், ஜெம் மருத்துவமனை, ஹெல்த் மற்றும் சப்ளிமென்ட் தயாரிப்பு நிறுவனமான நியூட்ரா பாக்ஸ்(நியூட்ரிஷன் பார்ட்னர்), இயற்கை முறையில், கருத்தரிப்பு அடைய செய்வதில் முன்னணி நிறுவனமாக அறியப்பெறும் எத்னிக் ஹெல்த் கேர் ஆகியவை கை கோர்த்துக் கொண்டன.இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து ஜெம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அசோகனிடம் பேசினோம்…;‘‘இந்த வளாகத்தில் கண்காட்சியைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், 8 மல்டி ஸ்பெஷாலிட்டி அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. எங்களுடைய ஹாஸ்பிட்டலில் நுண்துளை அறுவை சிகிச்சை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை உட்பட பல அதிநவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இவைத்தவிர, பித்தப்பை, கணையம், பெருங்குடல், மலக்குடல் ஆகிய உறுப்புக்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தரமான சிறப்பு சிகிச்சைகளைத் தொடர்ந்து அளித்து வருகிறோம். இது மட்டுமில்லாமல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகளை எளிதாக்கும் வகையில், அரசின் அனுமதியுடன், சிறுநீரகம்(Kidney), கணையம்(Pancreas) கல்லீரல் ஆகிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை நோயாளிகளுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார். மேலும் பல சிறப்பு விருந்தினர்களிடம் பேசினோம்…;ISO மு.அண்ணாதுரை(நிறுவன தலைவர், உலக சன்மார்க்க அமைப்பு)‘‘எங்களுடைய நிறுவனம் 15 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உட்பட 28 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.;எங்களுடைய பணிகளில், ஜீவ காருண்யம்(பசியால் வாடுவோருக்கு உணவளித்தல்), நலிவடைந்த சன்மார்க்க சங்கங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தல், வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்கத்தை உலகெங்கும் வாழும் மக்களுக்குக் கொண்டு செல்லல் போன்றவை மிக முக்கியமானவை. தமிழர் மரபை மீட்கும் மிகப்பெரிய புரட்சியாக, தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் தமிழர்களிடம் கொண்டு சேர்த்தல், தமிழர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு அளித்தல் என்ற பணிகளில், நாங்கள் தற்போது ஈடுபட்டு வருகிறோம். இதன்மூலம், தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவது எங்களின் இலக்கு.’’சித்த மருத்துவர் யோக வித்யா(Ethnic Health Care, இயற்கை கருத்தரிப்பிற்கான சிறப்பு மையம்)‘‘கலியுகத்தில் சித்தர்கள் 4,448 நோய்கள் வரும் எனச் சொல்லி இருக்கின்றனர். அவற்றில், மனிதர்களுக்கு நான்காயிரம் வகையான நோய்களும், விலங்குகளுக்கு 200 நோய்களும், பறவையினங்களுக்கு 200 வகையான பிணிகளும், பாம்பு, முதலை, உடும்பு போன்ற ஊர்வனங்களுக்கு எட்டு வகையான நோய்களும் வரும் என வகைப்படுத்தி சொல்கின்றனர். மேலும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளையும் ஓலைச்சுவடிகளில் கூறியுள்ளனர். இயற்கையான முறையில் குழந்தை பிறத்தல் என்பது மாறி, சிசேரியன் என்ற நிலைக்கு மாறிவிட்டது. இனப்பெருக்கம் என்பது தலையாய கடமையாக இருக்கும்போது அதற்காக, நிறைய பணம் செலவழித்து தேவையில்லாமல் கஷ்டப்படுவது ஏன்? மாற்று மருந்துகள் செயற்கையாக கருத்தரித்தல் முறை எதற்கு என்பது புரியவில்லை.!? எங்களுடைய சிறப்பு மையம் மூலமாக ஆண்களுக்கு ஏற்படும் விதை வீக்கம், விந்தணுக்கள் அற்ற தன்மை போன்ற பிரச்னைகளுக்கு இயற்கையான மூலிகை மருந்துகள் மூலமாக, உயிர் அணுக்களைப் பெற்று, இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறோம். பெண்களுக்கு உண்டாகும் நீர்க்கட்டிகளை 3-லிருந்து 6 மாதங்களுக்குள் குணப்படுத்துகிறோம். மேலும், தோல் நோய், தைராய்டு பிரச்னை போன்றவற்றிற்கும் பாரம்பரிய முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.’’எம்.அரசு(தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க செயலாளர்)‘‘தினகரன் நாளிதழ் சார்பாக நடைபெறும் இந்த மெடிக்கல் எக்ஸ்போவில், முதல் தடவையாக உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளல் மற்றும் பாடி பில்டர்ஸ் தொடர்பாக, அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.; தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பாக, பாடி பில்டர்ஸ் மற்றும் கட்டுடல் என்ற இரண்டு பிரிவுகளில் போட்டியை நடத்துகிறோம்.’’நிகார் தேசாய்(முதன்மை செயல் அதிகாரி, நியூட்ரா பாக்ஸ்)‘‘ஹெல்த் மற்றும் சப்ளிமென்ட் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எங்களுடைய நியூட்ரா பாக்ஸ், கடந்த 2014-ம் ஆண்டு கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. அகமதாபாத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், வே-புரோட்டீன்(Whey-Protein) Mass Gaineer Ripped, ,Brand Chain Amino Acid ,Raw-Whey Protein என; உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் நான்கு வகையான ஹெல்த் மற்றும் சப்ளிமென்ட்டைத் தயாரித்து ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்து வருகிறோம். ;; ;Raw-Whey Protein-ல் சாக்லேட், வெணிலா என்ற இரண்டு ப்ளேவர் உள்ளன. பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களும், கருவுற்ற பெண்களும் இவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே, நாங்கள்; அவர்களுக்கு இவற்றை எந்தக் காரணத்துக்காகவும் பரிந்துரை செய்வது கிடையாது. குழந்தை பெற்ற பின், அவர்கள் தாராளமாக இவற்றை சாப்பிடலாம். எங்களுடைய தயாரிப்புக்களைச் சாப்பிடுவதால், நிறைய பயன்கள் கிடைக்கும். அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில், கார்போஹைட்ரேட்; அதிகம். இதனால், உடலில் கொழுப்பு அதிகரித்து, எடை அதிகரிக்கும். ஆனால், எங்கள் பொருட்களைச் சாப்பிட்டு வருவதால், இதுபோன்ற ஆபத்தான விளைவுகள் எதுவும் வராது. எந்த நேரமும் இவற்றை சாப்பிடலாம்.ஆகவே, நடுத்தர வர்க்கத்தினராலும் இவற்றைத் தாராளமாக வாங்க முடியும். எங்களுடைய; ஹெல்த் மற்றும் சப்ளிமென்ட் சாப்பிடுவதால், எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.’’வினோத்குமார்(யூனிவர்சல் சர்ஜிகல் எக்யூப்மென்ட் கம்பெனி)‘‘எங்களுடைய நிறுவனம் சென்னை பாரிஸைத் தலைமையகமாகக் கொண்டு 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. வீட்டிலேயே சிறுவர், சிறுமியர் தொடங்கி, முதியவர் வரை சிரமம் எதுவும் இல்லாமல், எளிதான முறையில் பயன்படுத்தக்கூடிய, அனைத்து வகையான மருத்துவ உபகரணங்களையும், மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரமாக, நேரிடையாக விற்பனை செய்து வருகிறோம். முக்கியமாக, வயோதிகர்களுக்குத் தேவைப்படுகின்ற, அடல்ட் டயாபர், வாக்கர், சக்கர நாற்காலி, வாட்டர்; மற்றும் ஏர் பெட்,, ஹாஸ்பிட்டல் பெட், ஆக்சிஜன் மிஷின் மற்றும் அத்தியாவசிய தேவையான , தரமான பல; மருத்துவ உபகரணங்களை விற்கிறோம். நேரில் வந்து வாங்க; முடியாதவர்களுக்கு நாங்களே, எல்லா நாட்களிலும், இருபத்து நான்கு மணிநேரமும் டெலிவரி செய்கிறோம்.ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஆக்சிஜன் மிஷினை விற்பதோடு மட்டுமில்லாமல், குறைவான கட்டணத்தில் வாடகைக்கும் தந்து உதவுகிறோம். இவ்வாறு செய்வதால், விலை மதிப்பற்ற மனிதனின்; உயிரைக் காக்கும் சேவையில் எங்கள் நிறுவனம் ஈடுபட்டு வருவதை, இந்த நேரத்தில் பெருமிதத்துடன் கூறிக் கொள்ள விரும்புகிறோம். சென்னையில் இருந்து நாட்டின் பிற மாநிலங்களுக்கும் ஆர்டரின் பேரில், தேவையான மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்து வருகிறோம். எதிர் காலத்தில், தமிழகத்தின் மற்ற இடங்களில் கிளைகளைத் திறக்க திட்டமிட்டு உள்ளோம். மேலே குறிப்பிடப்பட்ட மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகின்றவர்களுக்குக் குறைந்த விலையில், உரிய நேரத்தில் கிடைக்க செய்வதுதான் எங்களுடைய முக்கிய இலக்கு.’’– விஜயகுமார்படங்கள் : விநாயகம், அருண், கௌதம், கணேஷ்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi