Tuesday, March 5, 2024
Home » பயனாளிகளுக்கு பயிர்கடன், வேளாண் இடுப்பொருட்கள் கலெக்டர் வழங்கினார்

பயனாளிகளுக்கு பயிர்கடன், வேளாண் இடுப்பொருட்கள் கலெக்டர் வழங்கினார்

by Karthik Yash

காஞ்சிபுரம், ஜன.24: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு, துறைச்சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இதில், கூட்டுறவு சங்கம் மூலம் 5 விவசாய பயனாளிகளுக்கு ₹3.79 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன்களும், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், 1 விவசாய பயனாளிகளுக்கு விசைத்தெளிப்பானும், 1 விவசாய பயனாளிக்கு தார்பாலினும், 3 விவசாய பயனாளிகளுக்கு உயிர் உரங்களும் என மொத்தம் 5 விவசாய பயனாளிகளுக்கு, 11 ஆயிரத்து 291 ரூபாய் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய இடுபொருட்கள் என மொத்தம் 10 விவசாய பயனாளிகளுக்கு, ₹3.90 லட்சம் மதிப்பிலான பயிர்கடன், மானியத்துடன் கூடிய வேளாண் இடுப்பொருட்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் ஜெய, வேளாண்மை இணை இயக்குநர் பிரின்ஸ் கிளமென்ட், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

17 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi