தர்மபுரி, ஆக.22: பென்னாகரம் தாலுகா தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சபரிநாதன் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை தலைவர் மாதேஸ், ஊராட்சி செயலர் வேட்ராயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.