கூடலூர்,ஆக.27: கூடலூரில் இருந்து நாடுகானி வழியாக பந்தலூர், சேரம்பாடி,கொளப்பள்ளி,தாளூர் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில்,செம்பாலா பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிழற்குடையின் முன்புறம் சாலையோரத்தில் சேறு நிறைந்து காணப்படுகிறது.
இதனால் பயணிகள் மழையில் நனைந்தபடியும்,அருகில் உள்ள பெட்டிக் கடைகளின் முன்பாக நின்றும் பேருந்துகளில் ஏறி செல்கின்றனர்.தினசரி உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்திற்கு ஏராளமான பேருந்துகள் செல்லும் நிலையில் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பேருந்து நிழற்குடையின் முன்புறம் உள்ள சாலையோரம் உள்ள சேறு, சகதிகளை அகற்றி பயணிகள் நிழற்குடைக்குள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.