பந்தலூர்,ஆக.26: பந்தலூர் அருகே சேரங்கோடு பஜார் பகுதியில் மிக பழமையான பழுதடைந்த பயணிகள் நிழற் குடையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு பஜார் பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடைக்குள் அமர்வதை தவிர்க்கின்றனர்.
இருப்பினும் மழை பெய்யும் நேரங்களில் இந்த நிழற்குடைகுள் மக்கள் நிற்கின்றனர். அபாயகரமான நிலையில் உள்ள நிழற்குடை இடிந்து விழுந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, உயிர்சேதம் நிகழும் அபாய நிலை உள்ளது.எனவே இதனை இடித்து அகற்றவும் இந்த பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.