மதுரை, ஜூன் 11: செல்லூர் எஸ்ஐ ராஜேஸ் தலைமையிலான போலீசார் குலமங்கலம் மெயின் ரோடு மீனாம்பாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற 3 பேரை போலீசார் சுற்றி வளைத்துப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் செல்லூரை சேர்ந்த பழனிவேல் மகன் பூபதிராகவேந்திரன்(22), சலீம் மகன் அப்பாஸ்(21) மற்றும், 17 வயது மதிக்கத்தக்க வாலிபர் எனத்தெரிந்தது. அவர்களிடம் இருந்து 2 அரிவாள் மற்றும் ஒரு கத்தி முதலிய பயங்கரமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள் கைது
0
previous post