ஊத்தங்கரை, ஆக.29: ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம், கொம்மம்பட்டு, கெடகானூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், பப்பாளியில் வாடல் நோய், இலை சுருட்டல் நோய், வைரஸ் நோய் தாக்குதலால் விளைச்சல் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. நோய் தாக்குதல் காரணமாக, மரத்தில் இலைகள் சுருண்டு, மஞ்சள் நிறத்தில் உள்ளது. மேலும் காய்கள் சிறுத்து மரத்திலேயே அழுகி விடுவதால், பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, போதிய மருந்துகளும் பூச்சி மற்றும் வைரஸ் நோய் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பப்பாளியில் நோய் தாக்குதல்
previous post