சாத்தான்குளம், ஆக.31: . சாத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா 26ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 4நாள்கள் நடந்தது. முதல் நாள் கும்பாபிஷேகம், சிறப்பு பூஜை, இரவு சுற்றுவட்டார பெண்கள் பங்கேற்ற 207 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திருவிளக்கு ஏற்றி அம்பாளை வழிப்பட்டனர். தொடர்ந்து மாக்காப்பு தீபாராதனை, 2ஆம் நாள் உச்சிகால பூஜை, அம்மன் கும்பம் எடுத்து வீதி உலா வருதல், மஞ்சள் பெட்டி எடுத்து வருதல், சாமகொடை, அம்மன் வீதி உலா வருதல் முளைப்பாரி எடுத்து வருதல், 3ஆம் நாள் சிறப்பு அலங்கார பூஜை, அம்மன் கும்பம் எடுத்து வீதி உலா வருதல், இரவு சாமகொடை, அம்மன் கும்பம் எடுத்து வீதிஉலா வருதல், மாவிளக்கு ஊர்வலம், 4ஆம் நாள் காலை சுவாமி உணவு எடுத்தல், விளையாட்டு போட்டிகள் நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.