மண்டபம்,மே 15:மண்டபம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் பனைக்குளம் பேருந்து நிலையம் முன்பாக, திமுக நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்து குமார் தலைமை வகித்தார். துணைச் செயலாளர், முன்னாள் ஊராட்சி தலைவர் பெளசியா பானு முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, ராமநாதபுரம் மிசா அகமது தம்பி, தலைமை கழக பேச்சாளர் ஆலங்குடி செல்வராஜ், கவிதா கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் பனைக்குளம் இளைஞர் அணி ரினோஸ்கான், பல தலைவர்கள் கலந்து கொண்டனர். கிளை கழக செயலாளர் ஜஹாங்கீர் அலி நன்றி கூறினார். கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.