கடலூர், ஆக. 15: கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சரவணன் (29). இவர் பந்தல் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று ஒரு சரக்கு வாகனத்தில், இரும்பில் பொருத்தப்பட்ட பேனர் ஒன்றை பிடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகர் வழியே சென்று கொண்டிருந்தபோது, மேலே சென்ற மின்சார கம்பியில் பேனர் பட்டு சரவணன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தல் போடும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
previous post