பந்தலூர், மே 25: பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தை சுற்றிலும் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில், பள்ளி வளாகத்தை சுற்றி வளர்ந்து காணப்படும் பார்த்தீனியம் செடிகளை அகற்றவும், ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை அகற்றவும், கழிப்பறை மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதை முறையாக பராமரிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.