பந்தலூர்,ஆக.17: பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி பகுதியில் உள்ள சமுதாய கூடம் திறந்த வெளி பார் போல மாறியதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி பகுதியில் உள்ள சமுதாயகூடம் சுற்றுப்புறத்தில் மதுப்பாட்டில்கள் குவிந்து காணப்படுகிறது.ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சமுதாய கூடம் இருப்பதால் குடிமகன்கள் மறைவான பகுதியில் கூடி மது அருந்துவதற்கு வசதியாக இருந்து வருகிறது.
சமுதாய கூடத்தை சுற்றியும் கால்பதித்து நடந்து செல்ல முடியாமலும், அருகே உள்ள பகுதியில் மது பாட்டில் குவியல்களாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த சமுதாய கூடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் மதுபாட்டில்களை கண்டு முகம் சுழித்து சென்றனர். பாதுகாப்பு இல்லாமல் இருந்து வரும் சமுதாய கூடத்தினை சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டித் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.