நாகர்கோவில், ஆக.28: பத்மனாபபுரம் ஆர்டிஓ தமிழரசி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது: பத்மனாபபுரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் பத்மனாபபுரம் ஆர்டிஒ அலுவலக கூட்டரங்கில், ஆகஸ்ட் 28ம் தேதி (இன்று) புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆர்டிஓ தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் தாலுகாவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.