அருமனை, ஜூன் 16: பத்துகாணியை அடுத்த நிரப்பு (பேராமலை) பகுதியில் தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி கோட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆறுகாணி காவல் நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் வின்சென்ட், பத்துகாணி வட்டார வளர்ச்சி குழு செயலாளர் பிடி சுகுமாரன், பத்துகாணி துணை சுகாதார நிலையத்தை சேர்ந்த சுகாதார அமைப்பாளர் அஜிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது கன்னியாகுமரி தபால் நிலைய பிரிவு சிறப்பு அதிகாரிகள் மற்றும் குழித்துறை துணைப் பிரிவு ஆய்வாளர் உள்ளிட்டோர் தபால்துறை மூலம் வழங்கப்படும் காப்பீட்டு திட்டங்கள், எதிர்கால நிதி சேமிப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல சேவைகள் குறித்து ஊர்மக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். பத்துகாணி, கற்றுவா, ஆறுகாணி உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.