சங்கரன்கோவில், மே 21: மேலநிலிதநல்லூர் ஒன்றியம் பட்டாடைகட்டி ஊராட்சியைச் சேர்ந்த வென்றிலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 56 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இது 100% தேர்ச்சியாகும். மாணவிகள் ரம்யா 468 மதிப்பெண்களும், மதிவாணி 463 மதிப்பெண்களும், வெற்றி காஞ்சனா 445 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பள்ளியின் வெற்றிக்கு பாடுபட்ட தலைமையாசிரியர், ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மணிமுத்து, ஊராட்சி தலைவர் சுமதி கனகவேல் மற்றும் பாண்டிராஜ், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வென்றிலிங்கபுரம் அரசு பள்ளி 100% தேர்ச்சி
0
previous post