கரூர், ஆக. 28: கரூர் திண்டுக்கல் சாலை பத்தாம்பட்டி பிரிவு நிழற்குடை மதுபான பாராக மாறி வருவதால் பயணிகள் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் ஈசநத்தம் வழியாக திண்டுக்கல் செல்லும் சாலையில் பத்தாம்பட்டி பிரிவுச் சாலை உள்ளது. இந்த பகுதியில் கரூர் செல்லும் பேரூந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லவும், ெபாதுமக்கள் காத்திருக்கவும் நிழற்குடை அமைத்து தரப்பட்டது.
தற்போது அந்த நிழற்குடையில் சமூக விரோதிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அமர்ந்து குடிப்பதால் பொதுமக்கள் காத்திருந்து பேருந்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிழற்குடை வளாகத்தை புதுப்பித்து பயணிகள் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.