பேரையூர், செப். 11: பேரையூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பதுக்கல் மது விற்பனை செய்த வழக்குகளில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். பேரையூர் சரக டிஎஸ்பி இலக்கியா உத்தரவின்படி போலீசார் சட்டவிரோத மது பாட்டில்கள் பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி பேரையூர் பெருமாள் கோயில் தெருவில் கண்ணன்(43), வடக்குத்தெருவில் தவமணி (57), சந்தையூரில் மாரிமுத்து (37), தும்மநாயக்கன்பட்டியில் பிச்சை (38), சிலைமலைப்பட்டியில் ராஜா (37) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவநதது.
அவர்களை பேரையூர் போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் கேத்துவார்பட்டியில் கருப்பாயி (53), வண்டாரியில் மாயன் (75), அணைக்கரைப்பட்டியில் சுந்தரராஜ் (65) ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை கைப்பற்றிய சாப்டூர் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையே, அல்லிகுண்டத்தில் சிவகணேசன் (22), சின்னக்கட்டளையில் பாண்டி (34), முத்துக்கருப்பன் (55), பெரியகட்டளையில் செல்வமீனா (23) ஆகியோரிடம் பதுக்கல் மது பாட்டில்களை கைப்பற்றிய சேடபட்டி போலீசார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.