சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழக வணிகவரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப்பணி குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யும் பணியினை திறம்பட செய்வது போன்ற புதிய பல முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 6.9.2021 முதல் 19.9.2021 வரை முடிவடைந்த இரண்டு வார காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 26,207 வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 32,892 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டது. வழிப்பட்டியல் இல்லாமல் சென்ற 530 இனங்களில் குற்றம் பதிவு செய்யப்பட்டு வரி/தண்டத்தொகையாக ரூ284.87 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. …