அரூர், ஜூலை 6:கம்பைநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றியுள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் திரையரங்கம் ஆகியவற்றில் வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் இருந்த கடைகள் மற்றும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படமாட்டாது, இங்கு புகைபிடித்தல் கூடாது என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்காத, 17 கடைகளுக்கு ரூ.7,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பதாகைகள் வைக்காத 17 கடைகளுக்கு அபராதம்
0
previous post