பண்ருட்டி, ஜூன் 22: பண்ருட்டி அருகே உள்ள தெற்கு மேல் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் சுபஸ்ரீ. இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி பண்ருட்டியில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். மாலையில் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் இவரது அண்ணன் ஆகாஷ் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்
38