வேலூர், ஜூன் 10: வேலூர் சிறை சரகத்தில் பணியிட மாறுதல் கேட்டு 50 போலீசார் மனு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் பணியாற்றும் முதல் நிலை போலீசார் பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டார். 400 கி.மீ தூரத்திற்கு மேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதை திரும்ப பெற வேண்டும் என காவலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சிறையில் பணியாற்றும் 2ம் நிலை போலீசாருக்கான பணியிட மாற்றம் தொடர்பான கலந்தாய்வு சென்னையில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் நாளை நடக்கிறது. இதில் பணியிட மாற்றம் பெறுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, வேலூர் சிறை சரகத்தில் 2ம் நிலை போலீசார் 120 பேர் பணியாற்றுகின்றனர். இதில் 50 பேர் பணியிட மாறுதல் கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களை சிறைத்துறை டிஜிபி அலுவலகத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணியிடமாற்றம் கேட்டு 50 போலீசார் மனு அதிகாரிகள் தகவல் வேலூர் சிறை சரகத்தில்
0