கூடலூர், ஆக.3: ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆருற்றுப்பாறை பகுதியில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக எல்லமலை செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் சென்றால் சாலை மேலும் சேதமடையும் என்பதால் பேரூராட்சியினர் இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் சாலை சேதமடைந்த பகுதியில் தற்காலிகமாக ரிப்பன் கட்டி அடைக்கப்பட்டிருந்த நிலையில் சில வாகன ஓட்டிகள் அந்த ரிப்பனை கழற்றி விட்டு வாகனத்தை இயக்கி வந்துள்ளனர். இதையடுத்து, மீண்டும் நேற்று பேரூராட்சி நிர்வாகத்தின மூலம் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி முற்றிலுமாக போக்குவரத்தை தடை செய்யப்பட்டுள்ளது.