பண்ருட்டி, செப். 3: கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில், பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் கீழ்மாம்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு முந்திரி தோப்பு ஒன்றில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த மேல் மாம்பட்டு கிழக்கு தெரு பாலசுப்பிரமணியன்(55), முத்தரசன் கிழக்குத் தெரு ராஜா(50), சீனு(33), மடப்பட்டு நடுத்தெரு வெங்கட்(30), மடப்பட்டு காமன் கோவில் தெரு அன்பு(32), கொஞ்சிக்குப்பம் அன்பழகன்(42) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த கும்பல் சூதாட்டத்துக்கு வைத்திருந்த ரூ.58 ஆயிரத்து 800 பணம், 6 செல்போன், இரண்டு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
previous post