தாரமங்கலம், பிப். 17: தாரமங்கலம் அருகே உள்ள கோட்டைமெடு, காடைகாரனூர் மாரியம்மன் கோயில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தாரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ேபாலீசார், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர் விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சின்னபையன்(51), தமிழ்ச்செல்வன்(27), சிதேஸ்வரன்( 27), ராஜமாணிக்கம் (55) என தெரியவந்தது. 4 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பணத்தை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.