தர்மபுரி, டிச.4: தர்மபுரி மாவட்டம் இண்டூர் எஸ்ஐ பெருமாள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏ.செக்காரப்பட்டி பச்சையம்மன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை துரத்திச்சென்று, அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி (26), சிவகணேசன் (39), அஜித்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹3220 பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
previous post