திருச்சி ஜூன்30: திருச்சியில் பணம் பறிக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி, தேவதானம் காவேரி சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார் (30). இவர் கடந்த 28ம் தேதி இ.பி சாலை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் ரூ.500 பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கீழ தேவதானத்தை சேர்ந்த அருண் பிரசாத் (37) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.