திருச்சி, பிப்.24: திருச்சி ஏர்போா்ட் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (55). இவர் பிப்.22ம் தேதி இரவு புதுக்கோட்டை மெயின் ரோடு கரிகாலன் தெரு அருகே நடந்து சென்றார். அப்பொழுது அவ்வழியாக வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி மது அருந்த பணம் கேட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஏர்போா்ட் போலீசார் வழக்குப்பதிந்து ஏர்போா்ட் அண்ணாநகர் லால்பகதுார் சாஸ்திரி தெருவை சேர்ந்த முகமது அனிபா (29) என்ற வாலிபரை கைது செய்தனர்.