மதுரை, ஆக. 27: மதுரை விளாச்சேரி ஆதிசிவம் நகரை சேர்ந்தவர் தர்பார்ராஜா(62) .இவரிடம் விளாச்சேரி மொட்ட மலையைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். ஆனால் தர்மராஜா பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் 3 பேரும் அவரை வழிமறித்து கொலை செய்யப்போவதாக அரிவாளுடன் விரட்டியுள்ளனர்.
இதில் பயந்து ஓடிய தர்மராஜா வீட்டுக்குள் ஓடிச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். பின்னர் சம்பவம் குறித்து திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விளாச்சேரி மொட்டமலை பிரசாத் என்ற சேது பிரசாத்(30), அதே பகுதியைச் சேர்ந்த கரன்ராஜா(25), குமார்(24) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.