பணகுடி,மார்ச் 10: நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், இந்தித் திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி காட்டும் ஒன்றியஅரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பணகுடி அருகே செட்டிகுளத்தில் நடந்தது. இதில் வள்ளியூர் ஒன்றிய தலைவரும், வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளருமான ராஜா ஞனதிரவியம் தலைமை வகித்தார்.
நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான்ரபீந்தர் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லைராஜா தொகுத்து வழங்கினார்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வேல்முருகன் அருள்ராஜ் மனோஜ்
குமார் முன்னிலை வகித்தனர். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் எம்பி ஞானதிரவியம், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பாரகு, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பாலா, மாவட்ட துணை செயலாளர் நம்பி, மாநில மீனவரணி துணை செயலாளர் எரிக் ஜுட், மாநில தொண்டரணி துணை செயலாளர் ஆறுமுகம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவராஜ், முன்னாள் வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் சிறப்புரையாற்றினர். வள்ளியூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எட்வின், வளன்அரசு, பேரூர் செயலாளர்கள் சேதுராமலிங்கம், தமிழ்வாணன், ஜான் கென்னடி உள்பட பலர் கலந்து கொன்டனர்.