பெரம்பலூர். ஜன.10: பெரம்பலூர், ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி தாவரவியல் துறை, விலங்கியல் துறை மற்றும் நுண்ணுயிரியல் துறை இணைந்து நடத்திய பட்டு வளர்ப்பு குறித்து ஒரு நாள் தொழில் முறை பயிற்சி வழங்கும் விழா நடைபெற்றது. ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற விஞ்ஞானி செல்வராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெரம்பலூர், அரியலூர் மாவட்டம் பட்டு வளர்ப்புத்துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன், திருச்சி மாவட்ட பட்டு வளர்ப்புத்துறை உதவி ஆய்வாளர் ரெங்கபாப்பா, பட்டு வளர்ப்புத்துறை உதவி கண்காணிப்பாளர் மகாலெட்சுமி கலந்து கொண்டனர்.
விழாவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரிமுதல்வர் சுபலெட்சுமி தொடங்கி வைத்தனர்.
முன்னதாக இளங்கலை மூன்றாமாண்டு விலங்கியல்துறை மாணவி திவ்யா வரவேற்றார். இவ்விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இளங்கலை மூன்றாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி செல்வப்பிரியா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளைத் தாவரவியல் துறை, விலங்கியல் துறை மற்றும் நுண்ணுயிரியல் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.