தஞ்சாவூர், ஆக. 12: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் தனபால் (59). இவர், தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தார். இதையடுத்து, தஞ்சாவூர் எஸ்.பி. ஆசிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயா தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் தனபாலை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க, தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து, தனபால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.