பட்டுக்கோட்டை, ஆக. 13: ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்’ என்ற கருத்தை வலியுறுத்தி பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் நடந்த உறுதி ஏற்பு நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆணையர் குமரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் சாந்திகுணசேகரன், குமணன், நகராட்சி கணினி உதவி திட்ட அமைப்பாளர் எட்வின் ஆரோக்கியராஜ்,
நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் மகாமுனி மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையயாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் உள்பட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்’ என்ற கருத்தை வலியுறுத்தி போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். ஆணையர் குமரன் உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டனர்.