பட்டுக்கோட்டை, ஆக. 8: தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக சார்பில் கலைஞர் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது உருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை தலைமை வகித்தார். பேராவூரணி எம்எல்ஏ அசோக் குமார் முன்னிலை வகித்தார்.
திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி உருவப் படத்திற்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம், முத்துமாணிக்கம், கோவிந்தராசு, இளங்கோ, அன்பழகன், இளங்கோவன், பேரூர் செயலாளர்கள் ராஜகோபாலன், அஸ்லம், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மூர்த்தி, மதுக்கூர் பேரூராட்சித் தலைவர் வாஹிதாஹாஜாமுகைதீன் மற்றும் திமுக தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.