பட்டிவீரன்பட்டி, ஆக. 18: பட்டிவீரன்பட்டி எஸ்ஐ ஜெயபால் தலைமையிலான போலீசார் அய்யம்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். இதில், அவர்கள் அய்யம்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த வசந்தகுமார் (19), ஷாம்சுந்தர் (19) என்பதும், அவர்களிடமிருந்த பையில் கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.