கோவை, மே 28: தமிழ்நாடு அரசு பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறப்பு தொழில் முனைவோர் திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நேரடி விவசாயம் தவிர்த்து அனைத்து வகையான உற்பத்தி, சேவை, வியாபாரம் உள்ளிட்ட தொழில்கள் துவங்க 55 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmeonline.in என்ற இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் எனவும், தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட உதவிகள் மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் எனவும் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.