காவேரிப்பட்டணம், ஆக.22: காவேரிப்பட்டணம் 13வது வார்டு சண்முக செட்டி தெருவில் வசிக்கும் 80 குடும்பங்களுக்கு, இதுவரை பட்டா இல்லை. எனவே பட்டா வழங்கக்கோரி காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் அம்சவேணி செந்தில் குமாரிடம் அப்பகுதியை சார்ந்தவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி தலைவர், கலெக்டரிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தும் தரப்படும் என உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை தலைவர் செந்தில்குமார், மற்றும் கவுன்சிலர்கள் அமுதா சக்திவேல், தமிழ்ச்செல்வி சோபன் பாபு, நித்தியா முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
previous post