பாலக்காடு, ஆக. 20: பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே ஆனைக்கரையில் மிக்ஸிங் யூனிட் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து காரணமாக ஆனைக்கரை பட்டாம்பி சாலையில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே ஆனைக்கரை பகுதியிலுள்ள கண்டநகம் சாலையின் சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர் சந்தோஷ்குமார் (32) என்பவர் சாலைப்பணிக்கான கான்கீரிட் மிக்ஸர் லாரியை இவ்வழித்தடத்தில் இயக்கி வந்துள்ளார்.
கண்டநகம் வளைவுசாலையில் எதிர்பாராதவிதமாக சிமெண்ட் கலவை லாரி சாலையின் நடுவே கவிந்தது. இதில் டிரைவர் சந்தோஷ்குமார் படுகாமடைந்தார். உடனடியாக சகஊழியர்கள் அவரை மீட்டு எடப்பாளிலுள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக பட்டாம்பி ஆனைக்கரை சாலையில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்துக்குறித்து ஆனைக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.