விருதுநகர், செப்.6: விருதுநகர் அருகே கடத்திய பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம் பஸ் நிறுத்தம் அருகில் ஆமத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாக்கு பையுடன் நின்றிருந்த மோகன்குமார்(33) என்பவரை சோதனை செய்தனர். சாக்கு பையில் பட்டாசு திரிகள் இருந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 200 குரோஸ் பட்டாசு திரியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.