ஏழாயிரம்பண்ணை, மே 21: வெம்பக்கோட்டை அருகே மேலகோதை நாச்சியார்புரம் பகுதியில், வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குருநாதன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள தங்கம் (39) என்பவர் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். இதில், உரிய அனுமதியின்றி 20 கிலோ சோர்சா வெடிகள் தயாரித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், தங்கத்தை கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
பட்டாசு தயாரித்தவர் கைது
0
previous post