சென்னை: பட்டாசு ஆலை வெடி விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் அடுத்த குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. பட்டாசுத் தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க காலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததுதான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. உயிரிழப்புகளை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகளோடு ஒரு விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, இனி வருங்காலங்களில் காலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும், பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்த வேண்டும்….