விருதுநகர், ஆக.23: மரத்தடியில் பட்டாசு தயாரித்த வழக்கில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மரத்தடியில் பட்டாசு தயாரிப்பதாக வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. ஆய்வாளர் பொன்மீனா தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆலை வளாகத்தில் உள்ள மரத்தடியில் ஆட்களை வைத்து பூச்சட்டி, தரைச்சக்கரம் ஆகிய பட்டாசுகளை பணியாளர்கள் தயார் செய்வது தெரியவந்தது.
உடனே பணியாளர்களை எச்சரித்து 30 குரோஸ் பூச்சட்டி பட்டாசுகள், 30 குரோஸ் தரைச்சக்கர பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். ஆலையின் உரிமையாளர் கோவிந்தநல்லூரை சேர்ந்த தெய்வநாயகம்(33), ஆலை மேலாளர் செங்கமலபட்டியை சேர்ந்த முருகேசன்(50) இவரையும் வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.