தர்மபுரி, ஜூலை 27: கம்பைநல்லூர் அருகே உள்ள போளைம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் மகள் ஜெயப்பிரியா(20). இவர் பிஏ முடித்துள்ளார். இவர் கடந்த 24ம் தேதி, மாற்று சான்றிதழ் வாங்க கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆதிமூலம் கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மாயமான ஜெயப்பிரியாவை தேடி வருகின்றனர்.
பட்டதாரி இளம் பெண் மாயம்
46