Wednesday, July 24, 2024
Home » பட்டதாரி இளம்பெண் கடத்தல்? போலீஸ் விசாரணை வேலை தேடிச்சென்ற

பட்டதாரி இளம்பெண் கடத்தல்? போலீஸ் விசாரணை வேலை தேடிச்சென்ற

by Karthik Yash

பெரணமல்லூர், ஜூலை 10: பெரணமல்லூர் அருகே வேலை தேடி சென்ற பட்டதாரி இளம்பெண்ணை காணவில்லை என தாய் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறிய நிலையில் வேறு கம்பெனியில் வேலை தேடிவந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வேலை விஷயமாக ஒரு கம்பெனியில் விண்ணப்பம் கொடுத்துவிட்டு வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் இளம்பெண் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். இருப்பினும் இளம்பெண் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் இளம்பெண்ணின் தாயார் பெரணமல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன பட்டதாரி இளம்பெண்ணை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

thirteen + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi